நாடு வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில், வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான செயல்பாட்டில், நாட்டில் கட்டமைப்பு ரீதியாக எதிர்நோக்கி வரும் அனைத்து சிக்கல்களையும் சவால்களையும் கண்டறிந்து தீர்வு காண வேண்டும். இந்தப் பயணம் வெற்றியடைய வேண்டுமானால் நாட்டு மக்களுக்கு பொய்களைக் கூறி ஏமாற்றக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று நம் நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் சுமார் 100 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளோம். எனவே, இந்த மரணப் பொறியில் இருந்து வெளிவரக்கூடிய வழிமுறைகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டிம். நாட்டை ஆள்பவர்கள் அனைவரும் எமது நாட்டின் தற்காலிக பொறுப்பாளர்களே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நாட்டுக்காக உடன்படிக்கைகளை மேற்கொள்ளும்போது தன்னைப் பற்றியோ, தனது இருப்பைப் பற்றியோ, தனது அரசியல் பயணத்தைப் பற்றியோ சிந்திக்காமல், நாட்டைப் பற்றியே சிந்தித்து செயல்பட வேண்டும் எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியாளர் தன்னைப் பற்றி சிந்திக்காமல், நாட்டின் 220 இலட்சம் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். நாட்டு மக்களை ஏமாற்றி மக்களை குறைமதிப்புக்குட்படுத்தும் காலம் முடிவுக்கு வர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.










