மக்களே அவதானம்! டெங்கு பரவும் அபாயம்!!

நாட்டில் கடந்த நாட்களாக தொடரும் மழையுடனான வானிலைக் காரணமாக பல மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகராட்சியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் 50 சதவீத டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கத்திற்கு உகந்த களமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நுளம்புகள் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நிலவும் மழையுடான வானிலை தொடரும்போது தற்போதைய நிலைமை மோசமாகவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles