ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் தற்போது இருக்கும் ஆதரவையும் இழக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சப்ரகமுவ மாகாண ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அரசமைப்பில் மாற்றம் மேற்கொண்டு இத்தேர்தல்கள் பிற்போடப்படலாம் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறான திட்டம் ஜனாதிபதியிடம் இல்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. அவ்வாறு செய்ய முற்பட்டால் இருக்கும் ஆதரவையும் அரசு இழக்க நேரிடும்.” – என்றார்.
