” சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கையால் மக்களும், அரசாங்க தலைவர்களும் என் பக்கம் உள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. எனவே, அவ்வாறானதொரு அறிக்கையை வெளியிட்டதற்காக சாகரவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தனக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் விரைவில் பதிலளிப்பேன். மக்கள் என் பக்கம், ஜனாதிபதி, பிரதமர், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்பக்கமே உள்ளனர் என்பது சாகர வெளியிட்ட அறிக்கையின் பின்னர் எனக்கு அறியக்கூடியதாக உள்ளது. எனது பலமும் நிரூபனமாகியுள்ளது. சாகரவுக்கு நன்றி.” – என்றார்.
