முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானார் என்று பரவி வரும் செய்தியில் உண்மையில்லை என அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மங்கள சமரவீர காலமானதாக இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகள் பரவி வருகின்றன.
இதுகுறித்து மங்கள சமரவீரவின் ஊடகப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி என்று உறுதிப்படுத்தினர்.
அத்துடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும் மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர் என்பதையும் உறுதிப்படுத்தினர்.
