பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர தோட்டப்பகுதியில் வாழும் சுமார் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மடக்கும்புர தோட்டத்தில் தெற்கு மடக்கும்புர, புதுக்காடு, சின்னக்கணக்கு உட்பட ஆறு பிரிவுகள் உள்ளன.
அப்பிரிவுகளில் இருந்து தேயிலை தொழிற்சாலைகளில் வேலை செய்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
மேற்படி தொழிற்சாலைகளில் சேவையாற்றும் துரைமார் மற்றும் தோட்ட அதிகாரிகள் சிலருக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 2 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவு 4 ஆம் திகதி வெளியானது.
தொற்றாளர்கள் வீடுகளில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்