மடுமாதா ஆலயத் திருவிழா 23 ஆம் திகதி ஆரம்பம்!

மன்னார் மருதமடுத் திருப்பதியின் ஆடி மாதத் திருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மருதமடு திருப்பதியின் ஆடி மாத திருவிழாவையொட்டி முன்னாயத்தக் கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் மன்னார்மறை மாவட்டக் குருமுதல்வர் அருட் தந்தை கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார். மடுத் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பிசோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அழைக்கப்பட்ட திணைக்களத்தலைவர்கள், இராணுவம், பொலிஸ், கடற்படை உயர் அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.

இதில் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சுகாதாரம், குடிதண்ணீர், போக்குவரத்து, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. இதன்போது நாட் டின் பலபாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் வருகைதர உள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு 400 பொலிஸாரை பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மருதமடுத்திருப்பதியின் ஆடிமாதத் திருவிழா எதிர்வரும் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை மாதம் 2ஆம் திகதி திருவிழாத் திருப்பலியுடன் நிறைவடையவுள்ளது.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles