மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரபர் வத்தை மெதவெலகம பகுதியில் அனுமதிபத்திரமின்றி, சட்ட விரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபரொருவர், விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை ஆக்கரத்தனை விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்குறிப்பிட்ட சந்தேக சந்தேக நபரின் இருப்பிடத்தை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது வெடிமருந்து நிரப்பி சுடும் துப்பாக்கி ஒன்று விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரையும் துப்பாக்கியையும் விஷேட அதிரடிப் படையினர் மடுல்சீமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மடுல்சீமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ராமு தனராஜா










