மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டைனாவத்தை பகுதியில் கள்ளசாராயம் ( கசிப்பு) விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சம்பவ விரைந்த பொலிஸார் ஒரு தொகை கள்ளசாராயத்தை கைப்பற்றியதோடு சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 3 ம் திகதி பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பசறை நிருபர் – ராமு தனராஜா
