லுனுகலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மடூல்சீமை, வெரலபத்தனை தோட்ட மேற் பிரிவில் ஏழரை வயது நிரம்பிய சிறுமி ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக லுனுகலை பொது சுகாதார காரியாலயத்தின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
குறித்த சிறுமியின் குடும்பத்தினர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் சிறுமிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியின் பெற்றோரும், அவர்களுடன் தொடர்பை பேணிய அயலவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிறுமியை தனிமைப்படுத்தல் சிகிச்சை முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- பசறை நிருபர்கள் –










