மடூல்சீமை எக்கிரிய செல்லும் 7 கிலோமீட்டர் வீதி குன்றும் குழியுமாக உள்ளது

– ராமு தனராஜா

மடூல்சீமையிலிருந்து எக்கிரிய செல்லும் பிரதான வீதியின் தனடின் தோட்டத்திற்கு செல்லும் சந்தியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கான எக்கிரிய வீதி ஆங்காங்கே குன்றும் குழியுமாக காணப்படும் நிலையில் வீதியின் இருமருங்கிலும் உள்ள செடி கொடிகள் வீதியை முற்றாக மறைத்துள்ளன.

மேலும் இதனால் வீதி விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதோடு அவ்வீதியால் செல்லும் வாகன சாரதிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.

எதிர்வரும் காலங்களில் பாடசாலைகளை ஆரம்பிக்க உள்ள நிலையில் அவ்வீதியினூடாக நடைப்பயணமாக மெட்டிக்காத்தனை பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் பெரும் அசௌகரியமான நிலை ஏற்படும் என்றும் வாகன சாரதிகளும் ஊர் மக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி வீதியை புனரமைத்து வீதியின் இருமருங்கையும் சுத்திகரித்து தருமாறு மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

 

Related Articles

Latest Articles