மணமகனுக்கு பிரதமரின் பெயர் தெரியவில்லை – திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம், சைத்பூர் நகர் அருகே நசீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம் அவதார். இவரது மகன் சிவசங்கருக்கும் (27), பசந்த் பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கடந்த 11-ம் திகதி மணமகன் குடும்பத்தினர் ரஞ்சனா வீட்டுக்கு சென்றனர். திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்தன. அப்போது மணமகள் குடும்பத்தினர் மணமகன் சிவசங்கரிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தனர்.

திடீரென மணமகள் ரஞ்சனாவின் தங்கை, மணமகனிடம் நமது நாட்டின் பிரதமர் யார் என்று கேட்டார், பதில் தெரியாமல் மணமகன் சிவசங்கர் விழித்தார்.

பிரதமர் மோடியின் பெயர் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக இருக்கும் நிலையில் அவரது பெயர்கூட மணமகனுக்கு தெரியவில்லையே என்று மணமகள் குடும்பத்தினர் குழப்பம் அடைந்தனர். இந்த தகவல் மணமகள் ரஞ்சனாவின் காதுக்கும் எட்டியது. அதிர்ச்சி அடைந்த அவர், பிரதமரின் பெயர்கூட தெரியாத நபரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார்.

அதன்பிறகு கிராமத்து தலைவர்கள் முன்னிலையில் இருவீட்டாரும் பேச்சு நடத்தினர். அப்போது மணமகனின் தம்பி ஆனந்துக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் ஆனந்தின் படிப்பறிவை சோதிக்க விரும்பிய மணமகள் வீட்டார், அவரிடம் சில பொது அறிவு கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் தெளிவான பதில்களை அளித்தார். இதைத் தொடர்ந்து ஆனந்துக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த சூழலில் மணமகனின் தந்தை ராம் அவதார், ‘‘துப்பாக்கியால் மிரட்டி எனது இளைய மகன் ஆனந்துக்கும் ரஞ்சனாவுக்கும் திருமணம் செய்து வைத்தனர். எனது மகன் ஆனந்த் திருமண வயதை எட்டவில்லை. அதற்கு முன்பே அவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவிட்டனர்’’ என்று பொலிஸில் முறைப்பாடு தெரிவித்தார்.

பொலிஸார் கூறும்போது, “இது விநோதமான வழக்கு. இதுதொடர்பாக இரு குடும்பத்தினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் அடிப்படையில் பிரச்சினைக்கு சட்டப்பூர்வமாக தீர்வு காணப்படும்’’ என்று தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles