எல்ல வெல்லவாய வீதியின் கரந்தகொல்ல பிரதேசத்தில் , வீதிக்கு மேலே இன்று (27) திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியில் வசித்த 08 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக வீதிக்கு மேல் மற்றும் கீழ் பகுதி இடிந்து விழுந்துள்ளது.
வெளியேற்றப்பட்ட எட்டு குடும்பங்களில் இரண்டு குடும்பங்கள் போத்திருக்கராம விகாரையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளன , மீதமுள்ள ஆறு குடும்பங்கள் அவர்களது உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
இந்த இடத்தில் மண்சரிவு அபாயம் உள்ளதா என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
ராமு தனராஜ்
