மண்டியிட்டது ஆஸி. அணி! நியூசிலாந்து வெற்றிநடை!

ரி- 20 உலகக் கிண்ண தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று ஆரம்பமாகியது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதற்கமைய முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்கள் குவித்தது. கான்வே 92 ஓட்டங்களுடனும் , நீஷம் 26 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 17.1 ஓவரில் 111 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 28 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகளையும், டிட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Related Articles

Latest Articles