தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.
தொடர் 1-1 என்ற சமனில் இருந்த நிலையில், தொடர் யாருக்கும் என்பதை தீர்மானிக்கு 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 209 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட்டிங் துவக்கிய தென் ஆப்பிரிக்கா தடுமாறியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 30 ஓவர்கள் மட்டுமே தாக்குப்படித்த தென் ஆப்பிரிக்க அணி 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரையும் வென்றது.
சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை கிரிக்கெட் அணி, சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.