சீரற்ற காலநிலையில் பண்டாரவளை பகுதியில் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலையே அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
61 வயது பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். அவரின் கணவர் காயமடைந்த நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
