இது சற்றே திரிந்த பழமொழி. “மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?” என்பதுதான் பழமொழி. குதிர் என்றால், ஆற்று வெள்ளத்தில் தற்காலிகமாக ஏற்பட்ட மணல்மேடு. அதில் கால் வைத்தால், நாம் ஆற்றில் மூழ்கி விடுவோம். அதனால் மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என்ற எச்சரிக்கைதான் இது. மற்றபடி, குதிரைக்கும் இந்தப் பழமொழிக்கும் ஒரு தொடர்பும் கிடையாது.