மத்தள சர்வதேச விமான நிலையம் 2017 முதல் 2021 ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் நஷ்டமடைந்துள்ளது என கணக்காய்வு அலுவலகத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செலவு (நிர்வாகத்துக்காக) 200 கோடி ரூபாவுக்கு மேலாகுமென்றும் இந்த செலவு வருமானத்தை விட இருபது மடங்கு அதிகமென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விமான நிலைய நிர்மானத்திற்காக செலவிடப்பட்ட 3 ஆயிரத்து 656 கோடி ரூபாவை பயனுள்ள வகையில் பயன்படுத்தவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.