மத்திய மாகாணத்திலிருந்து 30,812 பேர் உயர்தரம் கற்க தகுதி

மத்திய மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 41262 மாணவர்களில் 30,812 பேர் க.பொ.த உயர்தர வகுப்பிற்கு தகுதிப்பெற்றுள்ளனர்.இது 74.67 வீதமாகும் என பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மத்திய மாகாணத்தை சேர்ந்த மாவட்ட ரீதியாக தோற்றிய மாணவர்களில் கண்டி மாவட்டத்தில் 22023 பரீட்சார்த்திகளும் மாத்தளை மாவட்டத்தில் 7836 மாணவர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 11403 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

இவர்களில் மாத்தளை மாவட்டத்தில் 5590 மாணவர்களும் கண்டி மாவட்டத்தில் 16923 மாணவர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 8299 மாணவர்களும் க.பொ.த உயர்தரத்திற்கு தகுதிப்பெற்றுள்ளனர்.இதனடிப்படையில் மாத்தளை மாவட்டம் 71.34 வீதமும் கண்டி மாவட்டம் 76.84 வீதமும் நுவரெலியா மாவட்டம் 72.78 என்ற மாவட்ட வீத வளர்ச்சியும் காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை 2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 11403 மாணவர்களில் 8299 மாணவர்கள் க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இது 72,78 வீத வளர்ச்சியென பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பார்க்கும் போது நுவரெலியா மாவட்ட கல்வி வலயங்கள் ரீதியாக தோற்றிய மாணவர்களின் அடிப்படையில் ஹற்றன் கல்வி வலயத்திலிருந்து தோற்றிய 3454 மாணவர்களில் 2536 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.மேலும் நுவரெலியா கல்வி வலயத்திலிருந்து தோற்றிய 3295 மாணவர்களில் 2285 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கொத்மலை கல்வி வலயத்தில் தோற்றிய 1409 மாணவர்களில் 1065 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.மேலும் வலப்பனை கல்வி வலயத்தில் தோற்றிய 1502 மாணவர்களில் 1156 மாணவர்களும் அங்குராகெத்தையில் தோற்றிய 1743 மாணவர்களில் 1257 பேரும் சித்தியடைந்துள்ளனர். இதனப்படையில் நுவரெலியா 69.35 வீதமும்,கொத்மலை 75.59 வீதமும்,ஹற்றன் 73.42 வீதமும், வலப்பனை 76.96 வீதமும் அங்குராங்கெத்த 72.12 வீத வளர்ச்சியும் காட்டுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles