மத்திய மாகாணத்தில் இதுவரை 4046 பேருக்கு டெங்கு!

மத்திய மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை.விடுத்துள்ளது.

மத்திய மாகாண தொற்று நோய் தடுப்பு விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையில் மத்திய மாகாணத்தில் மாத்திரம் 4046 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது; கண்டி மாவட்டத்தில் 3,305 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 574 பேரும், மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் 167 பேருமாக மத்திய மாகாணத்தில் மொத்தம் 4046 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதால் பொது மக்கள் தத்தமது சுற்றாடலை டெங்கு நோய் பரவாமல் சுத்தமாக வைத்திருக்குமாறு மத்திய மாகாண சுகாதார திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Latest Articles