மத்திய மாகாணத்தில் களமிறங்க தயாராகும் அரசியல் வாரிசுகள்!

மாகாணசபைகளுக்கான தேர்தல் இவ்வருடத்துக்குள் நடத்தப்படும் என ஆளுந்தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மலையகத்திலுள்ள பிரதான கட்சிகளும் குறித்த தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளன. அத்துடன், முக்கிய பிரமுகர்கள் சிலர் சுயேட்சையாக போட்டியிடுவ பற்றியும் ஆராய்ந்துவருகின்றனர்.

மலையகத்தைப் பொருத்தமட்டில் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலேயே தமிழ்க் கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

குறிப்பாக மத்திய மாகாணசபைத் தேர்தலில் அரசியல் வாரிசுகள் போட்டியிடவுள்ளனர். முக்கிய வர்த்தகர்கள் சிலரும் களம் காண்பதற்கு தயாராகிவருகின்றனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன மாகாண தேர்தலை தனியாகவா அல்லது பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை. பெரும்பாலும் கூட்டணிக்கான சாத்தியமே பிரகாசமாக தென்படுகின்றது.

இவ்விரு அணிகளுமே சில புது முகங்களைக் களமிறக்கவுள்ளது. இதற்கான பேச்சுகள் தற்போதே ஆரம்பமாகியுள்ளன.

அதேவேளை, மத்திய மாகாணத்தில் அரசியல் வாரிசுகள் பலர் களமிறங்கவுள்ளனர்.

கண்டி மாவட்டத்தின் முன்னாள் எம்.பி., இராஜரட்னத்தின் மகன் ஜனார்த்தன், முன்னாள் மாகாண அமைச்சர் அருள்சாமியின் மகன் பாரத் அருள்சாமி, அமரர். சந்திரசேகரனின் மகள் அனுசா சந்திரசேகரன், அமரர். ஆறுமுகன் தொண்டமானின் குடும்ப உறுப்பினர் ஒருவர் உட்பட சிங்கள அரசியல்வாதிகளின் வாரிசுகளும், உறவுகளும் கூட போட்டியிடுகின்றனர்.

Related Articles

Latest Articles