மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக 47 விஷேட பொலிஸ் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய, மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில்,இவ்விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. கண்டி, கம்பளை, மாத்தளை, ஹற்றன் மற்றும் நுவரெலியா ஆகிய பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் இந்த விஷேட பொலிஸ் குழுக்கள் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.
இவ்விஷேட நடவடிக்கைகள் மூன்று மாத காலத்திற்கு பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்படும். மேலும்,போதைப்பொருள் விநியோகம் மற்றும் பாவனையை குறைப்பதற்கு வேறு வழிகளிலும் திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.