மத்திய மாகாணத்திலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. நேற்று மாத்திரம் 163 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் நேற்று 35 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை அம்மாவட்டத்தில் ஆயிரத்து 589 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
கண்டி மாவட்டத்தில் நேற்று 85 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இதுவரை மொத்தமாக 5 ஆயிரத்து 810 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 43 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அம்மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 404 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
