மத்திய மாகாண ஆளுநராக பாலித ரங்கே பண்டார?

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான பாலித ரங்கே பண்டார, மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐரோப்பிய விஜயத்தின் பின்னரே இந்நியமனம் வழங்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுநராக நாளை பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles