மத்திய மாகாண ஆளுநராக புத்திரசிகாமணி?

மத்திய மாகாணம் உட்பட 9 மாகாணங்களுக்கு புதிய ஆளுநரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருகிறார் என தெரியவருகின்றது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்டபோதுநியமிக்கப்பட்ட ஆளுநர்களே தற்போதும் பதவியில் உள்ளனர்.

இந்தநிலையில் அரசியல் அனுபவமுள்ளவர்களை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஆளுநர்களாக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருகின்றார்.

இதனூடாக முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும் ஆளுநர் பதவி வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மாகாண ஆளுநர் பதவி நவீன் திஸாநாயக்கவுக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியிருந்தாலும், முன்னாள் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணியின் பெயரும் ஆளுநர் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles