மத்திய வங்கி ஆளுநரின் புதிய உத்தரவு

வர்த்தக வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டொலர் பரிமாற்றத்தில் 25 சதவீதத்தை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான உத்தரவு சகல வர்த்தக வங்கிகளுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியினால் உரிமம் பெற்ற சகல வணிக வங்கிகள் மற்றும் சிறப்பு வங்கிகளுக்காக அறவிடப்படும் வருடாந்திர கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண அதிகரிப்பு அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles