” வீடுகளிலுள்ள அடுப்புகளில் தற்போது நெருப்பு இல்லை. மக்களின் மனங்களில்தான் நெருப்பு உள்ளது. அந்தளவுக்கு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்தான் மாபெரும் டொலர் மாபியா. பொருளாதார சீரழிவுகளை செய்துவிட்டு இன்று ஆளுநர் பதவியை வகிக்கின்றார். வெளிநாட்டு கையிருப்பு அதிகரிக்கும் எனவும் அறிவிப்புகளை விடுத்துவருகின்றார்.
இந்நாட்டு பொருளாதாரம் நெருக்கடி நிலைக்கு வந்ததற்கு இவர் உட்பட மேலும் பலர் பொறுப்பு கூறவேண்டும். அதில் ஒருவர் பதவி விலகபோவதாக தெரிவிக்கப்படுகின்றது. பதவி விலகுவதால் பொறுப்பு கூறலில் இருந்து தப்பித்துவிடமுடியாது. நிச்சயம் பொறுப்பு கூறியாக வேண்டும்.” – என்றார்.










