மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் குழுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
புலனாய்வு பிரிவிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமையவே, இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என தெரியவருகின்றது.










