மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
நீதி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” நபரொருவருக்கு தாம் விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை இருக்கின்றது. எந்தவொரு மதத்தையும் பின்பற்றாமல் இருப்பதற்கான உரிமையும் உள்ளது. எனினும், ஏனைய மதங்கள் தொடர்பில் முறையற்ற விதத்தில் பிரச்சாரம் செய்யும் உரிமை கிடையாது.” எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறான செயல்களில் ஈடுபடுவர்கள் எந்த இனம், எந்த மதமாக இருந்தாலும் தகுதி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் எடுத்துரைத்தார்.










