மனுஷமீது தாக்குதல் முயற்சி – ஐக்கிய மக்கள் சக்தி சபையிலிருந்து வெளிநடப்பு!

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தாக்க முற்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.

எதிரணி எம்.பிக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை தமது கட்சி எம்.பிக்கள் சபை அமர்வில் பங்கேற்கமாட்டார்கள் என எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

அத்துடன், மனுஷ நாணயக்காரவை ஆளுங்கட்சி எம்.பிக்கள் சபை வளாகத்தில் வைத்து தாக்க முற்பட்ட சம்பவத்துக்கும் கடும் எதிர்ப்பை அவர் வெளியிட்டார்.

அதேவேளை, ஆளுங்கட்சி எம்.பிக்கள் சிலர் நேற்றைய தினமும் சபைக்குள் வைத்து மனுஷ நாணயக்காரமீது தாக்குதல் நடத்த முற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles