மனைவியை வெட்டிக்கொலை செய்து விட்டு கணவன் உயிர்மாய்ப்பு!

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற கணவன் அறைக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் – அருகம்பே பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்தே குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த கணவன், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறை நீண்ட நேரம் திறக்கப்படாததை அடுத்து, ஹோட்டல் நிர்வாகம், பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் அறை திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் காணப்பட்டுள்ளது.
அறையின் குளியலறையில் குறித்த ஆண்ணின் சடலம், தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மஹகலுகொல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆண் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Latest Articles