மன்னார், அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று காலை இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுளளனர்.
ஈச்சலவக்கை , நொச்சிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 36 மற்றும் 49 வயதுடைய இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவேளையிலேயே, இவ்விருவர்மீதும் இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










