“பிளமிங்கோ” பறவைகள் மன்னார் பகுதிக்கு புலம்பெயர்ந்து வந்துள்ளன. உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடி களைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் இந்தப் பறவைகள் புலம்பெயர்ந்து வந்துள்ளன.
புலம்பெயர் பறவைகளுள் மிகவும் அரிதான மற்றும் மிகவும் உணர்திறன் கொண்ட பறவை இனம் பிளமிங்கோ ஆகும். தற்போது அவை அனைத்தும் மன்னாரில் குவிந்துள்ளன. இந்தப் பறவைகள் மன்னாரில்; பொதுவாக ஏப்ரல்வரை இருக்கும்.
இவை இலங்கைக்கு இடம்பெயர்வது மட்டுமன்றி, பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் புலம்பெயர்கின்றன.
