மன்னிப்பு கோரினார் மெட்டா நிறுவன பிரதானி மார்க்

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சக்கர்பெர்க் செனட் விசாரணையின்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

உலகின் முன்னணி சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டாமார்க் சக்கபேர்க் (39).

சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல் சம்பந்தமான வீடியோக்கள் தொடர்பில் அந்நிறுவனங்களின் மீது பலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளின் மீது அமெரிக்க செனட் சபை நேற்று விசாரணை நடத்தியது.

இதில் மார்க் சக்கர்பெர்க் நேரில் பங்கேற்று தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.

விசாரணை தொடங்கியதும் ஊடகங்களில் , குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்த வீடியோவை விசாரணைக்குழு ஒளிபரப்பியது. இதில் பல உயிரிழப்பு சம்பவங்கள் குறித்தும் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டன.

குடியரசு கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹாவ்லி (Josh Hawley), மார்க் சக்கபேர்க் நோக்கி, “உங்கள் வலைதள உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்கள என கேட்டார்.

அப்போது, மார்க் சக்கர்பெர்க் எழுந்து நின்று கொண்டு அக்குடும்பத்தினரை நோக்கி பேசினார்.

அவர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

” நீங்கள் அனைவரும் அனுபவித்த கொடுமையான துன்பங்களுக்கு நான் வருந்துகிறேன். உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்கள் வேறு
வேறு எவருக்கும் வர கூடாது. என்னை மன்னியுங்கள்.” – என்றார்.

TikTok, Snap, X ஆகிய சமூக ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

Related Articles

Latest Articles