மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்குமா?

சந்தைகளில் மரக்கறி விலை இதற்கு முன்னர் இல்லாதது போன்று விரைவாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளனா்.

பேலியகொட மெனிங் சந்தையில் இன்றுள்ள (20) நிலைமை தொடர்பில் மெனிங் பொது வியாபாரிகளின் சங்கத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளா் அனில் இந்திரஜித் கருத்து தெரிவிக்கையில்,

மெனிங் சந்தைக்கு இன்றைய தினம் மரக்கறிகள் கிடைத்திருந்தாலும் கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது மரக்கறிகளின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எரிபொருள், உரப் பற்றாக்குறை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நுகர்வோா் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனா். இவ்வாறானதொரு சூழ்நிலையில் மரக்கறி விலையை போன்று ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலைமையில எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதேவேளை ,அரசாங்கம் தலையிட்டு விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் தலையிட்டு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் உணவுப் பொருட்களுக்கான நெருக்கடி நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளாா்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles