மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி கம்பளையில் விபத்து!

மரக்கறி ஏற்றிச்சென்ற லொறியொன்று கம்பளை நகரில் இன்று முற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கம்பளை, நாவலப்பிட்டிய பிரதான வீதியில் இபோச பஸ் டிப்போவுக்கு முன்பாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.அதுவும் மஞ்சள் கடவைக்கு அருகில் உள்ள தூண் ஒன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. அவ்வேளையில் மஞ்சள் கடவையில் சில பாதசாரிகள் சென்றுள்ளனர்.

விபத்து தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Latest Articles