பதுளை, பசறை பிரதான வீதியில் பசறை பால் சேகரிக்கும் நிலையத்துக்கு அருக்கில் உள்ள பாலத்தில் மோதி சிறிய ரக லொறியொன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் அறுவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மடுல்சீமை, பட்டவத்தை தோட்டத்தில் உத்தியோகத்தர்களாக கடமை புரிபவர்கள், பலாங்கொடையிலுள்ள மரண வீடொன்றுக்கு சிறிய ரக லொறி ஒன்றில் சென்று, மீண்டும் மடூல்சீமை பட்டவத்தைக்கு திரும்பிக் கொண்டிருந்தவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா, ந. மலர்வேந்தன்










