மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலி! ஹாலிஎலயில் சோகம்!!

மரம் முறிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு 48 வயதுடைய பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெளித்தன்ன – மாவத்தேகம ஹாலிஎல பகுதியிலேயே இன்று மதியம் அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர்மீதே இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர், பதுளை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

ஹாலிஎல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles