மற்றுமொரு யுவதியும் வன்புணர்வு? ரிஷாட்டின் மச்சான் கைது!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரன் ( ரிஷாட்டின் மச்சான்) கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாட்டின் வீட்டில் தீ காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான மற்றுமொரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாட்டின் வீட்டில் 2015ஆம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பணிப் பெண்ணாக கடமையாற்றிய யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

22 வயதான யுவதியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே, ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனான 44 வயதான மதவாச்சி பகுதியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles