மலேசிய பொதுத் தேர்தலில் மஹதீர் மொஹமட் படுதோல்வி!

மலேசிய பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதீர் மொஹமட் 53 வருடங்களின் பின்னர் தோல்வியை சந்தித்துள்ளார். கடந்த ஏழு தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் அவர் பெற்ற படுதோல்வி இதுவெனஅரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், லங்காவி தீவுகள் தொகுதியில் போட்டியிட்டபோது மிக அதிகமான பெரும்பான்மை வாக்குகளை பெற்று அவர் பிரதமராக தெரிவாகியிருந்தார்.

ஆனால், நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியடைந்தமை மலேசியாவை மட்டுமல்லாமல் சர்வதேசத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அளிக்கப்பட்ட வாக்குகளில் எட்டில் ஒரு பங்கு வாக்குகளைக் கூட பெறமுடியாத நிலையில், கட்டுப்பணத்தை இழந்ததுடன், அவரின் கட்சியினால் ஒரு ஆசனத்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles