மலையகத்தில் உள்ள இந்து ஆலயங்களை பதிவுசெய்வது இடைநிறுத்தம் – மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்து

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து வரும் இந்து ஆலயங்களை பதிவு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அவ் ஆலயங்களின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்ய முடியாமல் உள்ளது. ஆகவே, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் ஆலயம் பதிவு செய்யும் வேலைத்திட்டத்தினை மீளவும் நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொள்வதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அக்கடிதத்தில், ‘ கணிசமான இந்து ஆலயங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதால், அரசினாலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் அவ் ஆலய அபிவிருத்திக்கு நிதியினை ஒதுக்க முடியாமல் இருந்து வருகின்றது. இது குறித்து பலர் என்னிடம் முறையிட்டுள்ளனர். ஆகவே ஆலயப் பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதால், அவ் ஆலயங்களை அபிவிருத்தி செய்ய முடியாமல் உள்ளன.

இதனால் ஆலய பரிபாலன சபையினர் பலரும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். ஏற்பட்டிருக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு ஆலய பதிவுகளை மீளவும் நடைமுறைப்படுப்படுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles