மலையகத்தில் கடும் மழை: நீர்த்தேக்கங்களின் நீட்மட்டம் அதிகரிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தொடர்ந்து கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்தேக்கத்தின் நீர் மட்டும் வெகுவாக உயர்ந்து உள்ளது.

மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்ட இன்னும் மூன்று அடி மட்டுமே உள்ளது.

கென்யோன் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டி உள்ளது,
விமலசுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டி உள்ளது,

லக்சபான நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது இன்னும் நான்கு அங்குலம் மட்டுமே நிறைய உள்ளது, மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்ட 6 அங்குலமே நிரம்ப உள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகள் அருவிகள் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் சகல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து எந்த நேரத்திலும் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்படலாம் ஆகையால் தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன மழை காரணமாக பெரும் தோட்ட தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கையும் பண்ணையாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles