உலகில் பல நாடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையானது, கொரோனா வைரஸ் தாக்கத்தால் இம்முறை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே கொண்டாப்படுகின்றது. ஆராதனைகளுக்குகூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் வீடுகளில் இருந்தே தேவ ஆதராதனைகள் இடம்பெற்றன. ஏனைய பகுதிகளில் 50 பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆராதனைகள் இடம்பெற்றன.
அந்தவகையில் மலையகத்திலுள்ள தேவலாயங்களில் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. இயேசு பிறப்பையொட்டி கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.
ஹட்டன் நகரில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் 25.12.2020 அன்று விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன் பீரிஸ் அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
க.கிசாந்தன்
