‘மலையகத்தில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி திருவிழாக்களை நடத்தவும்’

நுவரெலியா மாவட்டத்தில் நகர மற்றும் பெருந்தோட்டங்களில் நடைபெறும்  திருவிழாக்களில் பெருமளவு பக்தர்கள் கூட்டமாக ஒன்று கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி 50 இற்கும் குறைவான பக்தர்களே திரு விழாக்களில் அதுவும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பங்கேற்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்றாது, நிகழ்வுகளை நடத்தினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்த்தனர்.

Related Articles

Latest Articles