மலையகத்தில் தொடரும் சோகம் – குளவிக் கொட்டில் இருவர் பலி!

மலையகத்தின் இருவேறு பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெப்லோ பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 67 வயதான வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டின் அருகிலிருந்த வர்த்தக நிலையமொன்றுக்கு சென்று திரும்புகையில், மரமொன்றிலிருந்த குளவிக்கூடு கலைந்து அவர் மீது தாக்கியுள்ளது.

பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர், வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொக்சைல்ட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் 54 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இந்த சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சடலம் புசல்லாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles