மலையகத்தில் நிலைமைகள் வழமைக்கு திரும்பியது – இராணுவத்தினர் பாதுகாப்பில்

நாட்டில் நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணிமுதல் தளர்த்தப்பட்டதை அடுத்து மலையகத்தில் நிலை

சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், கடை தொகுதிகள் என்பன திறக்கப்பட்டு இருப்பதையும் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவில் மும்முறமாக ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

சில இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுப்பட்டிருந்தது.

பாடசாலைகள் மூடப்பட்டு இருப்பதையும், அரச திணைக்களங்கள் திறந்திருந்துள்ளதுடன் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இடம்பெறுவதையும் அவதானிக்க முடிந்தது.

மேலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருப்பதையும் நகரங்களின் பிரதான சந்திகளில் வீதிமறியல் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

(க.கிஷாந்தன்)

Related Articles

Latest Articles