நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில் அமைக்கப்பட்ட தபாலகம் கடந்த 18 வருடங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் அதனை மீள திறக்குமாறு தோட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த தபாலகமானது தொழிலாளர்களின் நலன்கருதி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் 2002/04/06ம் திகதி அப்பூது பிரதியமைச்சராயிருந்த அமரர். பெரியசாமி சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது.
ஒஸ்போன் தோட்டத்தில் தபால்சேவையை துரிதப்படுத்துவதற்காக மேற்படி நிலையம் அமைக்கப்பட்டபோதும் ஆறுமாதம் காலமே குறித்த தபாலகம் இயங்கியுள்ளது .பின்னர் காரணமேயின்றி தபாலகம் மூடப்பட்டுள்ளது.
ஹட்டன் பொது தபாலகமே தற்போது இவர்களுக்கு காணப்படுகின்றது.இந்நிலையில் குறித்த நேரத்தில் கடிதங்கள் கிடைக்கப்பெறாமையினால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தோட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தபாலகத்தை தபாலகமாக மாற்றாவிடினும் அதனை ஒஸ்போன் தோட்டத்திற்கான வாசிகசாலையாக மாற்ற தற்போதைய அரசியல் வாதிகள் முன்வர வேண்டும் என தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தி – நீலமேகம்பிரசாந்த்