தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சின் அதிகாரிகளுடன் இன்றைய 16.07.2021 தினம் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அமைச்சினூடாக கடந்தகாலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அமைச்சின் அதிகரிகளினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அத்தோடு பெருந்தோட்ட பகுதிகளிலே அமைக்கப்படவிருக்கும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
கடந்த அரசாங்கத்தினால் நிர்மானிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் பல்வேறு உட்கட்டமைப்புகள் மற்றும் குறைப்பாடுகள் காணப்பட்டன. அக்குறைப்பாடுகளை வெகுவிரைவில் நிவர்த்தி செய்து மக்களிடம் கையளிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் அமைச்சின் கீழ் இயங்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகர்த்த மன்றத்தின் கீழ் செயற்பட்டுவரும் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிச்சி நிலையத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலையரங்கு கட்டிடத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அத்தோடு அதிகாரசபையின் ஊடாக ஆரம்பிக்கப்படவிருக்கும் நகரங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கும் விசேட வேலை திட்டம் தொடர்பாகவும் கவனம் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜி .குமாரஸ்ரீ , அமைச்சின் அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர், சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகர்த்த மன்றத்தின் பணிப்பாளர்கள்,மற்றும் அதிகார சபையின் பணிப்பாளர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.










