மலையக ஆசிரியர் உதவியாளர்களை, ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.
மலையக ஆசிரியர் உதவியாளர்களை, ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வலியுறுத்தும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதம் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
” மலையக பெருந்தோட்டப்பகுதியில் ஆசிரியர் சேவைக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. 3000 பேரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் நியமிக்கப்பட்டவர்களுக்கான உரிய நியமனத்தை வழங்கவேண்டும். பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் கல்விப்பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்.” – என்றும் குறிப்பிட்டார்.