” மலையக தமிழ் மக்கள் ஏற்றத் தாழ்வான விதத்தில் பாதிக்கப்பட்டிருப்பதை நான் நேரடியாகப் பார்த்தேன்.” என்று சமகால அடிமைத்துவ வடிவங்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் டெமோயா ஓபோகாட்டா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ஐ.நா. அறிக்கையாளர் அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் இதர தரப்பினர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். அத்துடன், கண்காணிப்பு பயணங்களையும் மேற்கொண்டிருந்தார். பெருந்தோட்ட பகுதிக்கும் அவர் சென்றிருந்தார்.
தனது பயணத்தின் முடிவில் கொழும்பில் நேற்று ஊடக சந்திப்பொன்றை நடத்தினார்.
இதன்போது, ” ஓரம் கட்டப்படுதல், பாரபட்சம், சுரண்டல் இயல்பிலான வேலை நிலைமைகள் மற்றும் மிக மோசமான வாழ்க்கை நிலைமைகள் என்பவற்றினால் மலையகத் தமிழர்கள் ஏற்றத் தாழ்வான விதத்தில் பாதிக்கப்பட்டிருப்பதை நான் நேரடியாகப் பார்த்தேன்’ – என்று குறிப்பிட்டார்.
இலங்கை பயணம் தொடர்பில் குறித்த அறிக்கையாளர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை சமரப்பிக்கவுள்ளார். அவ்வறிக்கை செப்டம்பர் மாதம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.